அ(ம்)ன்புச் சொற்கள்.

சுத்தியுள்ளவர்களை
அச்சம் கொள்ளச்
செய்யும்
கத்தி வீசும்
கண்கள் உனது.

சொல்வதைக் கேட்டே
தீர வேண்டுமென்ற
மென்வன்மம்
உன் வார்த்தைகளில்.

பேச்சுக்கிடையே
கலைந்து விழும்
கேசத்தைச்
சரி செய்கிறாயா?

கவனிக்கத் தவறும்
என்னைப் பரிகசிக்கிறாயா?

இதுவரை தெளிவில்லை
எனக்கு.

ஆனாலும்

உன்னோடு பேசுவதற்கும்
உன்னிலிருந்து
இன்னும் இன்னும்….
பெறுவதற்கும்
மிச்சமிருக்கின்றன
அன்பு தோய்ந்த சொற்கள்.

4 Comments on அ(ம்)ன்புச் சொற்கள்.

  1. நல்ல கவிதை பாராட்டுக்கள்.

  2. நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  3. மனமுவந்து வாழ்த்திப் பாராட்டிய
    அன்பு உறவுகள் கோவி.கண்ணன், சி.கருணாகரசு & ஷாஹுல் ஹமீது மூவருக்கும் இதயங்கனிந்த நன்றி.

Leave a comment

Your email address will not be published.


*