“முத்து மழை”

 

* அபூர்வமாய்
வாய்த்தது
அடைமழைத்
தருணம்.

* நெஞ்சிலும் ஓயாத
சத்த மழை.

* விரித்த குடையோடு
வீதியில் வருகிறாய்….:)

* சடுதியில்
சர்வ நாடியும்
ஒடுங்கிப் போயின
சாதுவாய்….!

* மழையை ரசிப்பதா?

* உன்னை ரசிப்பதா?

* மாறி மாறி
யோசிக்கும் என்னையே
பரிகசிப்பதா?

* வியப்பில்
வியர்த்த வேளை

* குறும்பாய்த்
தலை சாய்த்துக்
கூடவே
குடை சாய்த்தாய்…..!

* பட்டுத் தெறித்த
மழைத் திவலைகளில்
ஒரு துளி
இறங்கியது
என்
நெற்றியில்….

* சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளியாய்ச்
சிலிர்த்துப் போனது
மனசு.

* இப்போது
முத்து மழை.
.
.
.
.
.
.

* இனி எப்போது
முத்த மழை?!…:)

4 Comments on “முத்து மழை”

  1. வரிகள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

  2. அடி மழை இடியோடு விழுந்தால் முத்த மழை மாறி பெரும் சத்த மழையாகிவிடும்…ஹி ஹி …
    நல்லதோர் கவிதை மழையில் எமை நனைந்திடச் செய்ததற்காய் நன்றிகள் பல.

    நட்புடன்
    அபுஸாயிமா

  3. kavithai (kovaikkavi)…
    வரிகள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    //
    வருகை + ஊக்கத்துக்கு நன்றி.

  4. அடி மழை இடியோடு விழுந்தால் முத்த மழை மாறி பெரும் சத்த மழையாகிவிடும்…ஹி ஹி …
    நல்லதோர் கவிதை மழையில் எமை நனைந்திடச் செய்ததற்காய் நன்றிகள் பல.

    நட்புடன்
    அபுஸாயிமா
    //
    வாஞ்சையான கருத்துக்கு வற்றாத அன்பின் பதில் மொழி நன்றி… 🙂

Leave a comment

Your email address will not be published.


*