அதிரும் உயிர்.

• வேட்டுவனின்

கவணிலிருந்து
விடுபட்ட
குறுங்கல்
ஊதிச் செல்கிறது
 விதியின் துயரத்தை….
• சிறகதிரப்
பறந்து செல்லும்
பறவையின்
ஒற்றை இறகு
காற்றில் அலைந்தபடி
சொல்லித் திரிகிறது…
இருத்தலின்
அவசியத்தை……

Leave a comment

Your email address will not be published.


*