“மெய்”யழகி

வலிமையை விரும்பும் ஆண்கள் அதிகம் நேசிப்பது உடற்கட்டழகு. இந்தியாவில் ஒரு பெண் அந்தத் துறையில் மிளிர்கிறார். யார் அவர்?

வலிமையை விரும்பும் ஆண்கள் அதிகம் நேசிப்பது உடற்கட்டழகு. இந்தியாவில் ஒரு பெண் அந்தத் துறையில் மிளிர்கிறார். பிற பெண்கள் கட்டழகுடன் திகழ பயிற்றுவிப்பாளராகவும் செயல்படுகிறார்.

மும்பையச் சேர்ந்தவர் 38 வயது கருணா வாமரே. உடற்கட்டழகி (Body Builder). பயிற்றுவிப்பாளர், நடனக் கலைஞர், விளையாட்டாளர்.

சென்ற ஆண்டு Macauவில் நடந்த ஆசிய உடற்கட்டழகுச் சாதனையாளர் போட்டியில் வெண்கலம் வென்றவர். இந்திய அளவிலும் பல பதக்கங்களைப் பெற்றவர். தேசிய அளவிலும், உலகளவிலும் உடற்கட்டழகுப் போட்டிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்.

உலக உடற் கட்டழகிப் போட்டியில் வெல்வது இலக்கு. அதன் தொடக்கச் சுற்றுகளில் பல தோல்விகள். இருப்பினும் தம் கனவை அடைவதற்கான தூரம் தொலைவில் இல்லை என்கிறார் நம்பிக்கையுடன்.

சஞ்சிகை ஒன்றில் ஓர் உடற்கட்டழகியைப் பார்த்துத் தாமும் அவர் போலாக வேண்டும் என்று வேட்கையை வளர்த்துக் கொண்டார் கருணா வாமரே. ஆனால் மும்பைப் பெண் ஒருவர் உடற்கட்டழகியாவது எளிதானதா? சமூகம் இவரை எப்படிப் பார்க்குமோ என்று கவலைப்படுகிறார் கருணாவின் தயார் பிரமிளா பாண்டுரங்கன் வாமரே. ஒருவேளை அப்பா ஏசலாம். எனவே அவருக்குத் தெரியாமலேயே சில போட்டிகளில் கலந்து கொண்டதாகச் சொல்கிறார் வாமரே.

உடல் எடையை ஐம்பது கிலோவாகவே வைத்திருக்க வேண்டும் என்பது எண்ணம். உடற்பயிற்சிக் கூடத்தில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்.

Karuna Waghmare 02

பிற பெண்களும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளப் பயிற்சியளிக்கிறார். அது ஓரளவு இவருடைய வசதிகளைப் பெருக்க  உதவுகிறது.

தாம் செய்வது என்ன என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லை. அதனால் அவர்களுடனான இணக்கம் பாதிக்கப்படுகிறது. அது வலி மிகுந்த வேதனை. வாழ்க்கையின் துயரம் மிக்க தியாகம் என்கிறார் கருணா வாமரே.

2 Comments on “மெய்”யழகி

  1. பெயரையும் ஆங்கிலத்தில் பதிந்து இருக்கலாம், Google ல் தேட வசதியாக இருந்திருக்கும்… ம்ம்ம்

Leave a comment

Your email address will not be published.


*