பாக்தாதில் சவூதி அரபியா தூதரகம்

சுமார் கால்நூற்றாண்டுக்குப் பிறகு பக்தாதில் சவூதி அரபியா தூதரகம் அமையவுள்ளது.

ஈராக்குடனான உறவைப் புதிய பாதையில் கொண்டு செல்ல முடிவெடுத்திருக்கிறது சவூதி அரேபியா.

சுமார் கால்நூற்றாண்டுக்குப் பிறகு பக்தாதில் சவூதி அரபியா தூதரகம் அமையவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவு 1990 ல் முறிந்தது.

2004 ல் முன்னைய அதிபர் சத்தாம் ஹுஸைனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து சவூதி அரேபியா நேசக்கரம் நீட்ட முன்வந்தது. இருப்பினும் சவூதி அரேபியா, பக்தாதில் தனது தூதரகத்தை இதுவரை திறக்கவில்லை.

இந்நிலையில் அங்கு தூதரகத்தை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்துள்ளது. தூதரகம் அமைப்பதற்கான இடம், தேவையான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றைக் குழு ஆராயும்.

குர்திஸ்தான் சுயாட்சிப் பகுதியின் தலைநகராக விளங்கும் அர்பில் நகரில் துணைத்தூதரகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.வட்டார நாடுகளுடன் உறவை வலுப்படுத்த அது உதவும் என்று நம்புகிறது சவூதி அரபியா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்ற ஆண்டு நவம்பரில் ஈராக் அதிபர் ஃபுஆத் மஃசூம் சவூதி அரேபியாவுக்குச் சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பு உறவில் புதிய மலர்ச்சி ஏற்படுவதாகத் தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published.


*