துருக்கியில் புதிய தேவாலயம்

1923 ல் துருக்கி குடியரசாக மலர்ந்தது. அதன் பிறகு இப்போதுதான் முதன் முறையாக ஒரு புதிய தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துருக்கியின் இஸ்லாமிய அரசாங்கம் புதிதாக ஒரு தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

துருக்கியில் வாழும் சிறுபான்மை சிரியாக் சமூகத்தினரின் வேண்டுகோளை ஏற்று அத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1923 ல் துருக்கி குடியரசாக மலர்ந்தது. அதன் பிறகு இப்போதுதான் முதன் முறையாக ஒரு புதிய தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லின் புறநகர்ப் பகுதியில்,மர்மரா கடற்கரையில் புதிய தேவாலயம் அமையும். ஏற்கனவே அவ்வட்டாரத்தில் கிரேக்க, ஆர்மீனிய,கத்தோலிக்கத் தேவாலயங்கள் அமைந்துள்ளன.

துருக்கியின் மொத்த மக்கள் தொகை 76 மில்லியன்.அவர்களில் சிறுபான்மை கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவே.  அவர்களில்,சிறுபான்மை சிரியாக் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் குறைவு.

பெரும்பாலும் தென்கிழக்குப் பகுதியில் கூடாரங்கள் அமைத்தும், ஆர்த்தோடக்ஸ், கத்தோலிக்க தேவாலயங்களின் ஆதரவோடும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

துருக்கியின் அனைத்து சமூக மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் அஹ்மத் தாவூத் ஒக்லு கூறினார்.

உள்ளூர் நிர்வாகம் வழங்கும் நிலத்தில் சிரியாக் கிறிஸ்தவர்களின் நிதியில் புதிய தேவாலயம் அமைக்கப்படும் என்று துருக்கி அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*